/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீஸ் கூட்டுறவு சங்கத்தில் லாபத்தொகை வழங்காததால் ஏமாற்றம்
/
போலீஸ் கூட்டுறவு சங்கத்தில் லாபத்தொகை வழங்காததால் ஏமாற்றம்
போலீஸ் கூட்டுறவு சங்கத்தில் லாபத்தொகை வழங்காததால் ஏமாற்றம்
போலீஸ் கூட்டுறவு சங்கத்தில் லாபத்தொகை வழங்காததால் ஏமாற்றம்
ADDED : செப் 30, 2025 02:24 AM
சேலம், சேலத்தில் செயல்பட்டு வரும் காவலர் சிக்கன நாணய சங்கத்தில், சேலம், நாமக்கல் மாவட்ட, மாநகர போலீசில் பணிபுரியும், 3,000க்கும் மேற்பட்ட போலீசார் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்தில் கிடைக்கும் டிவிடென்ட் எனும் லாபத்தொகை, ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதம் முன் உறுப்பினர்களுக்கு பிரித்து கொடுப்பது வழக்கம்.
ஒவ்வொரு காவலருக்கும், ரூ.10 ஆயிரம் முதல் 24 ஆயிரம் ரூபாய் வரை இத்தொகை கிடைக்கும். மேலும் இதில், இனிப்பு மற்றும் பட்டாசுகளும் வழங்கப்பட்டு வந்தது. நடப்பாண்டில், லாபத்தொகை வழங்குவதற்கான நடவடிக்கை எதுவும் தொடங்கப்படவில்லை. இதனால், தீபாவளி பண்டிகைக்கு லாபத்தொகை கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. இதை எதிர்பார்த்து காத்திருந்த போலீசார், அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
வழக்கமாக ஒரு மாதத்துக்கு முன்பே, ஆடிட்டிங் முடித்து, ஒவ்வொரு உறுப்பினருக்கும் எவ்வளவு தொகை என கணக்கிட்டு, பில் பாஸ் செய்வது வழக்கம். தீபாவளிக்கு சில தினங்களே உள்ள நிலையில், இன்னும் ஆடிட்டிங் செய்யப்படவில்லை. இதனால், தீபாவளி செலவுக்கு எதிர்பார்த்திருந்த போலீசார், ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர். உடனடியாக ஆடிட்டிங் நடத்தி, லாபத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.