/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இரு தரப்பினர் இடையே தகராறு:தாக்கிய 19 பேர் மீது வழக்கு
/
இரு தரப்பினர் இடையே தகராறு:தாக்கிய 19 பேர் மீது வழக்கு
இரு தரப்பினர் இடையே தகராறு:தாக்கிய 19 பேர் மீது வழக்கு
இரு தரப்பினர் இடையே தகராறு:தாக்கிய 19 பேர் மீது வழக்கு
ADDED : மார் 05, 2024 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்:பாதை தகராறு தொடர்பாக, காரில் சென்றவரை தாக்கிய, 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைவாசல் அருகே, சிறுவாச்சூர் ஊராட்சி, நேரு நகரை சேர்ந்தவர் சுந்தரராஜன், 45. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே, பாதை தொடர்பாக பிரச்னை எழுந்தது. நேற்று முன்தினம், சுந்தரராஜன் காரில் சென்றபோது, சிலர் வழி மறித்து தாக்கினர். அவர் அளித்த புகாரில், அதே பகுதியை சேர்ந்த ராஜவேலு, பால
கிருஷ்ணன், லோகநாதன், தனசேகர், சீரங்கன், கணேசன், பொன்னுசாமி, கனகராஜ், செல்வக்குமார் உள்பட, 19 பேர் மீது, ஏழு பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.