/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புகாரை கண்டுகொள்ளாத அதிருப்தி; தி.மு.க., ஒன்றிய பிரதிநிதி விலகல்
/
புகாரை கண்டுகொள்ளாத அதிருப்தி; தி.மு.க., ஒன்றிய பிரதிநிதி விலகல்
புகாரை கண்டுகொள்ளாத அதிருப்தி; தி.மு.க., ஒன்றிய பிரதிநிதி விலகல்
புகாரை கண்டுகொள்ளாத அதிருப்தி; தி.மு.க., ஒன்றிய பிரதிநிதி விலகல்
ADDED : பிப் 05, 2025 07:18 AM
சேலம்: புகாரை கண்டுகொள்ளாத அதிருப்தியில், தி.மு.க.,வில் இருந்து, ஓமலுார் ஒன்றிய பிரதிநிதி விலகி உள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலுார், பாகல்பட்டி ஊராட்சி, பூமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் எழிலரசன், 35. தி.மு.க.,வின், மத்திய மாவட்ட தொழில்நுட்ப அணி, முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளராகவும், தற்போது, ஓமலுார் ஒன்றிய பிரதிநிதியாகவும் செயல்பட்டு வந்தார். இவர், கட்சி உறுப்பினர், பதவியில் இருந்து விலகுவதாக, நேற்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'தி.மு.க., ஆட்சியில் தலித்களுக்கு பாதுகாப்பு இல்லை. முக்கியத்துவமும் கிடையாது. பேரனுக்கு பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டும்நிலை வெகுதொலைவில் இல்லை. அதற்கு நாங்கள் தயாராக இல்லை. இனியும் என்னால், தி.மு.க.,வில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் நமது நிருபரிடம் கூறியதாவது: கட்சியில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து, கடந்தாண்டு செப்., 1ல், கரிசல்பட்டியில் நடந்த பொதுக்குழுவில், ஒன்றிய செயலர் செல்வகுமரன், மாவட்ட கவுன்சிலர் சண்முகத்திடம், கடிதம் கொடுத்தோம். அந்த கூட்டத்தில் மாவட்ட செயலர் ராஜேந்திரன் பங்கேற்காததால், அவரது, 'வாட்ஸாப்'புக்கு கடிதத்தை அனுப்பினேன். அதில் எங்களை கட்சியை விட்டு நீக்கி விடும்படி, பூமிநாயக்கன்பட்டி கிளை தலைவர் சேட்டு, ஒன்றிய பிரதிநிதியாகிய நான், கிளை துணை செயலர்கள் வெங்கடாசலம், அனிதா கையெழுத்திட்டிருந்தோம். ஆனால், மாவட்ட செயலர், பெயரளவுக்கு கூட விசாரிக்கவில்லை. அந்த அதிருப்தியில் கட்சியை விட்டு விலகிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.