/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு பள்ளிகளில் 'அவசர' ஆண்டு விழா: முதன்முதலில் நிதி ஒதுக்கியும் அதிருப்தி
/
அரசு பள்ளிகளில் 'அவசர' ஆண்டு விழா: முதன்முதலில் நிதி ஒதுக்கியும் அதிருப்தி
அரசு பள்ளிகளில் 'அவசர' ஆண்டு விழா: முதன்முதலில் நிதி ஒதுக்கியும் அதிருப்தி
அரசு பள்ளிகளில் 'அவசர' ஆண்டு விழா: முதன்முதலில் நிதி ஒதுக்கியும் அதிருப்தி
ADDED : பிப் 14, 2024 10:56 AM
சேலம்: முதன்முதலில் நிதி ஒதுக்கியும் உரிய அவகாசம் தராமல், 'அவசர' ஆண்டு விழாவாக நடத்தி முடிக்கப்பட்டதால் பெற்றோர், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர்.
தமிழகத்தில், 37,576 அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த, 14.93 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, 100 மாணவருக்கு குறைவாக இருந்தால், 2,500 ரூபாய்; 101 முதல், 250 வரை, 4,000; 251 முதல், 500 வரை, 8,000; 501 முதல், 1,000 வரை, 15,000; 1,001 முதல், 2,000 பேர் வரை, 30,000; 2,000 பேருக்கு மேல், 50,000 ரூபாய் வீதம் நிதி ஒதுக்கப்பட்டது.
அத்துடன் கடந்த, 10க்குள் அனைத்து பள்ளிகளிலும் ஆண்டு விழாவை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அத்துடன் அதன் அறிக்கையை உடனே சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால் அரசு பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் அவசர அவசரமாக நடத்தி முடிக்கப்பட்டன.
இதுகுறித்து பெற்றோர், ஆசிரியர்கள் கூறியதாவது:
மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வரவும், ஊக்கப்படுத்தவும், ஆண்டு விழா கொண்டாடப்படும். ஆனால் கடந்த, 5ல் நிதி ஒதுக்கி, 10க்குள் ஆண்டு விழாவை நடத்தி முடிக்க உத்தரவிட்டதால் அதன் நோக்கம் முழுமையாக நடைபெறவில்லை.
குறுகிய காலத்தில், வி.ஐ.பி.,யை அழைப்பது, மாணவர்களை கலைநிகழ்ச்சிக்கு தயாரிப்பது என எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. முதன்முதலில் ஆண்டு விழாவுக்கு நிதி ஒதுக்கியும், அதை நடத்த அவகாசம் தராததால் அதிருப்தி ஏற்பட்டது.
செய்முறை தேர்வு, மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் நடக்கிறது. அதற்கு உயர்நிலை, நடுநிலை, துவக்கப்பள்ளிகளில் ஏன் அவசரம் காட்ட வேண்டும் என தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

