தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/கோவில் திருவிழாவில் தகராறு கேபிள் இணைப்புகள் துண்டிப்பு

கோவில் திருவிழாவில் தகராறு கேபிள் இணைப்புகள் துண்டிப்பு

கோவில் திருவிழாவில் தகராறு கேபிள் இணைப்புகள் துண்டிப்பு


ADDED : ஜன 02, 2013 02:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2013 02:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி: இடைப்பாடி அருகே, கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இடைப்பாடி தாலுகா வெள்ளரிவெள்ளி பகுதியில், செல்லியாண்டி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவில், நான்கு நாட்களுக்கு முன், இரவில் நாடகம் நடந்த போது, கல்லபாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும், வேட்டுவப்பட்டியை சேர்ந்தவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், பலத்த காயமடைந்த வேட்டுவப்பட்டியை சேர்ந்த வெங்கடாசலம் மகன் கோவிந்தராஜ், 28, என்பவர் இடைப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, பூலாம்பட்டி போலீஸார், கல்லபாளையம் பகுதியை சேர்ந்த வீராசாமி, பாலாஜி, பிரகாஷ், மோகன்ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, வீராசாமியை கைது செய்தனர்.

இந்நிலையில், கல்லபாளையம் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவர் நடத்தி வரும் அரசு கேபிள் இணைப்புகளை, சிலர் நேற்று இரவு வெட்டி எறிந்துள்ளனர். இதனால் நேற்று முதல் வேட்டுவப்பட்டி, கோனேரிப்பட்டி, சிலுவம்பாளையம் உள்பட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், டிவி பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வேட்டுவப்பட்டியை சேர்ந்த சிலர், அரசு கேபிளை துண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது பற்றி, சங்ககிரி டி.எஸ்.பி., ராமசாமியிடம் கேட்ட போது, ''அரசு கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது பற்றி என் கவனத்திற்கு வரவில்லை. விசாரித்து தகவல்களை தெரிவிக்கிறேன்,'' என்று கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us