ADDED : நவ 15, 2026 01:10 AM
சேலம்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை ஒட்டி, தமிழக விளையாட்டு மேம்பாடு ஆணையம் சார்பில், சேலம் மாவட்ட அளவில், பள்ளி மாணவ, மாணவியருக்கு சைக்கிள் போட்டி, காந்தி மைதானத்தில் நேற்று நடந்தது.
100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
முடிவில், 13 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் இனியவன், தமிழ்செல்வன், சித்தார்த்; மாணவியர் பிரிவில் நிவேதிதா, பாலம்பிகா, பிரிதன்யா; 15 வயது மாணவர் பிரிவில் தினேஷ், ஸ்ரீவர்சன், சஞ்சய் கார்த்திக்; மாணவியர் பிரிவில் தர்ஷினிஸ்ரீ, நித்யஸ்ரீ, பூர்ணாஸ்ரீ; 17 வயது மாணவர் பிரிவில் தாரகேஷ், கனிஷ், தேவபிரசாத்; மாணவியர் பிரிவில் பிரித்தா, வர்ஷா, தாரணி ஆகியோர் முறையே, முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அவர்களுக்கு முறையே, 5,000, 3,000, 2,000 ரூபாயும், 4 முதல், 10ம் இடம் வரை பிடித்தவர்களுக்கு, தலா 250 ரூபாய் பரிசுத்தொகைகள், அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்மணிதேவி, மாவட்ட சைக்கிள் சங்க நிர்வாகிகள், உடற்கல்வி
பயிற்சியாளர்கள் செய்திருந்தனர்.
