மணமகன் மாயமானதால் திருமணம் ரத்துஅரசு பள்ளி ஆசிரியர் உள்பட மூவர் கைது
மணமகன் மாயமானதால் திருமணம் ரத்துஅரசு பள்ளி ஆசிரியர் உள்பட மூவர் கைது
ADDED : அக் 21, 2012 03:29 AM
மேட்டூர்:
மேட்டூர், இரட்டை புளியமரத்தூரை சேர்ந்த செல்வம் மகள் உமாதேவி, 25.
மேச்சேரி அடுத்த கரும்புசாலையூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜப்பன்
மகன் விவேகானந்தன் (எ) சீனீவாசன், 27. இவர் எருமைப்பட்டி ஊராட்சி ஒன்றிய
துவக்கபள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.விவேகானந்தனுக்கும்,
உமாதேவிக்கும் திருமணம் நிச்சயம் செய்து, பத்திரிக்கை அடித்து
உறவினர்களுக்கு கொடுத்தனர். அக்டோபர் 18ல், சின்னத்திருப்பதி பெருமாள்
கோயிலில் திருமணம் நடப்பதாக இருந்தது. திருமணத்துக்கு முதல்நாள்
நிச்சயதார்த்தம் முடித்து, இரு வீட்டாரும் இரவில் சின்னத்திருப்பதி
புறப்பட்டனர்.
சின்னதிருப்பதிக்கு செல்லாமல் மணமகன் விவேகானந்தன்
தலைமறைவாகி விட்டார். மணமகன் மாயமாகிய நிலையில், திருமணம் நின்று விட்டதால்
மணமகள் மற்றும் பெண் வீட்டார் விரக்தியடைந்தனர். தங்களை ஏமாற்றிய மணமகன்,
அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, செல்வம் கருமலைக்கூடல் போலீஸில்
புகார் செய்துள்ளார்.நடவடிக்கை எதுவும் இல்லாததால் விரக்தியடைந்த பெண்
வீட்டார் நேற்று மாலை கருமலைக்கூடல் போலீஸ் ஸ்டேஷன் அருகே, ரோட்டில் திடீர்
மறியலில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து விவேகானந்தன், அவரது தந்தை ராஜப்பன்,
64, தாய் மங்கம்மாள், 62, ஆகிய மூவரையும் நேற்று இரவு கைது
செய்தனர்.மேலும், மணமகன் பெற்றோர் திருமணத்துக்கு, 10 பவுன் தாலி, 50 சவரன்
தங்கநகை, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் வரதட்சணையாக கேட்டனர். அதை கொடுக்க
முடியாது என, கூறியதால் திருமணத்தை நிறுத்தி விட்டதாக நேற்று, உமாதேவியின்
தந்தை செல்வம், போலீஸாரிடம் தெரிவித்தார். போலீஸார் விசாரிக்கின்றனர்.
