ADDED : அக் 21, 2012 06:06 AM
சேலம்:
சேலம், அம்மாபேட்டை, டி.வி.கே., ரோட்டை சேர்ந்தவர் தினகரன், 38. நூல்
வியாபாரி. இவர், சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, டாஸ்மாக் கடையில் மது
குடித்துக் கொண்டிருந்த போது, நால்வர் கும்பல், சிகரெட் கேட்டு தகராறு
செய்துள்ளனர். சிகரெட் தர மறுத்த தினகரனை, சரமாரியாக தாக்கி, பீர்
பாட்டிலால் குத்தியதோடு, போலீஸில் புகார் செய்தால், கொலை செய்து விடுவதாக
மிரட்டிவிட்டு, நால்வரும் தப்பியோடி விட்டனர்.காயமடைந்த தினகரன்,
சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது
தொடர்பாக, கொலை மிரட்டல் விடுத்தது உள்பட நான்கு பிரிவுகளில்
வழக்குப்பதிவு செய்து, கன்னங்குறிச்சி, எம்.ஜி.ஆர்.,சிலை பகுதியை சேர்ந்த
நாகராஜ் மகன் ராஜாமணிவண்ணன், 31, என்பவரை, சேலம் டவுன் போலீஸார் கைது
செய்தனர்.
இவரது கூட்டாளிகள் மூவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்
மீது, திருட்டு, அடிதடி, கொலை மிரட்டல் என பல்வேறு வழக்குகள் நிலுவையில்
உள்ளது.
