ADDED : அக் 21, 2012 06:06 AM
அ நிறம் | அளவு
சேலம்:
ஆசிரியர் அடித்ததால் காயமடைந்த, தனியார் பள்ளி மாணவி, சேலம் அரசு
மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சேலம், மல்லூர்
அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன்.
இவர், மாவட்ட மதுவிலக்கு
ஆய்வு பிரிவில், நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள்
ஸ்ரீமதி,16. இவர், மல்லூர் பகுதியிலுள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில்,
எஸ்.எஸ்.எல்.ஸி., படித்து வருகிறார். கடந்த, 16ம் தேதி, பள்ளி
வகுப்பறையில், கணித ஆசிரியர் அடித்ததாகவும், அதனால், வலி தாங்க முடியவில்லை
என, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதையடுத்து, சேலம் அரசு
மருத்துவமனையில், ஸ்ரீமதி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.வெண்ணந்தூர்
போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
