ADDED : அக் 21, 2012 06:07 AM
அ நிறம் | அளவு
தலைவாசல்:
தலைவாசல் அருகே, தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண், பாம்பு கடித்து பரிதாபமாக
உயிரிழந்தார்.விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தாலுகா, சேராப்பட்டு
பெருமாநத்தம் பால்ராஜ் மகள் கண்ணகி, 17. அவர், தலைவாசல் அருகே, வரகூர்
கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னதுரை என்பவரது விவசாய தோட்டத்தில், வீரிய
ரக பருத்திக்கு, 'மொக்கு' போடும் வேலை பார்த்து வந்தார்.
நேற்று,
அதிகாலை, 3 மணியளவில், தூங்கிக் கொண்டிருந்த கண்ணகியை, பாம்பு
கடித்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், கண்ணகியை, ஆத்தூர் அரசு
மருத்துவமனையில், சிகிச்சைக்கு சேர்த்தனர்.நேற்று காலை, 7
மணியளவில்,சிகிச்சை பலனின்றி, கண்ணகி பரிதாபமாக உயிரிழந்தார். தலைவாசல்
போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
