/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'டேன்மேக்' ஒப்பந்த பணியாளருக்கு தீபாவளி போனஸ்
/
'டேன்மேக்' ஒப்பந்த பணியாளருக்கு தீபாவளி போனஸ்
ADDED : அக் 18, 2025 12:56 AM
சேலம் சேலம், கருப்பூர் அருகே, தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம்(டேன்மேக்) முன், அதன் ஒப்பந்த தொழிலாளர்கள், தீபாவளி போனஸ் கேட்டு, கடந்த, 14ல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, குறைந்தபட்ச போனஸ் வழங்கப்படும் என, 'டேன்மேக்' நிறுவனம் அறிவித்து, அதன்படி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, அவரவர் வங்கி கணக்கில் போனஸ் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட மேக்னசைட் பாட்டாளி தொழிற்சங்க பொதுச்செயலர் சதாசிவம் கூறியதாவது:'டேன்மேக்' நிறுவனத்தில், 2007 முதல், ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு இதுவரை, 1,000 முதல், 3,000 ரூபாய் வரை, சொற்ப தொகையில் போனஸ் வழங்கப்பட்டது. தற்போது தொழிலாளர்கள் கோரிக்கைப்படி, முதல்முறை குறைந்தபட்ச போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி குறைந்தபட்சம், 6,500 முதல், அதிகபட்சம் 18,000 ரூபாய் வரை போனஸ் கிடைத்துள்ளது. இதனால், 400க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நிரந்தர தொழிலாளர்கள், 190 பேருக்கு அரசு அறிவித்தபடி, 16,400 ரூபாய் போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.