/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆழ்வார்களுக்கு தீபாவளி பரிசு 'ஜாலி சாலி வைபவம்' கோலாகலம்
/
ஆழ்வார்களுக்கு தீபாவளி பரிசு 'ஜாலி சாலி வைபவம்' கோலாகலம்
ஆழ்வார்களுக்கு தீபாவளி பரிசு 'ஜாலி சாலி வைபவம்' கோலாகலம்
ஆழ்வார்களுக்கு தீபாவளி பரிசு 'ஜாலி சாலி வைபவம்' கோலாகலம்
ADDED : அக் 22, 2025 01:10 AM
சேலம், வைகுண்டத்தில் உள்ள பெருமாள், அவரது தாசர்களான ஆழ்வார்களுக்கு, தீபாவளி இனாம் பரிசு வழங்கும் வைபவம், சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் நேற்று நடந்தது. அதில் பன்னிரு ஆழ்வார்களுக்கும், பெருமாள், தீபாவளி பரிசு வழங்கி பாதசேவை கண்டருளினார். அதற்கு, 'ஜாலி சாலி வைபவம்' என்று பெயர்.
குறிப்பாக சவுந்தரராஜர், ஸ்ரீதேவி, பூதேவி, கோதைலட்சுமி என்ற ஆண்டாள் நாச்சியார் மற்றும் சவுந்தரவல்லி தாயார் என, 4 தேவியர்களுடன் குடும்பம் சகிதமாக சர்வ அலங்காரத்தில், ஆழ்வார்கள் முன் எழுந்தருளினார்.
தொடர்ந்து ஒவ்வொரு ஆழ்வாராக அவரது திருநாமம் சொல்லி அழைத்து வரப்பட்டு, பட்டாச்சாரியார்களால் புத்தாடை பரிவட்டம் கட்டி, மங்களாசாசனம் செய்து தீபாவளி இனாம் அளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கண்டு
களித்தனர்.
அவர்களுக்கு, பெருமாளுக்கு படைக்கப்பட்ட இனிப்பு கார வகை பலகாரங்கள் வழங்கப்பட்டன. ஆண்டில், இந்த ஒரு நாள் மட்டுமே சவுந்தரராஜர், 4 தேவியர்களுடன் குடும்பம் சகிதமாக ஆழ்வார்கள், பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.