/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியில் கோ - ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை

ADDED : செப் 19, 2025 01:26 AM
சேலம் :சேலம் கடை வீதியில் உள்ள, கோ - ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகையில், தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை, கலெக்டர் பிருந்தாதேவி நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார். அங்கு கைத்தறி நெசவாளர்களால் தயாரிக்கப்பட்ட, பல்வேறு பட்டு புடவைகள், காட்டன் புடவைகள், படுக்கை விரிப்புகள், வேட்டி, லுங்கி, துண்டுகள், சட்டைகள் உள்ளிட்ட அனைவருக்குமான கைத்தறி ரகங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.
தீபாவளியை முன்னிட்டு, 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. தவிர அரசு, அதன் சார்ந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வசதியுடன், 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஞாயிறிலும், கோ - ஆப்டெக்ஸ் செயல்படுகிறது. நடப்பாண்டு சேலம் தங்கம் பட்டு மாளிகைக்கு, 4.64 கோடி ரூபாய், ஆத்துார் நிலையத்துக்கு, 28 லட்சம் என, 4.92 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் தெரிவித்தார்.
கோ - ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சுந்தர்ராஜன், மேலாளர் பாலசுப்ரமணியன்(உற்பத்தி மற்றும் பகிர்மானம்), கைத்தறித்துறை துணை இயக்குனர் ஸ்ரீதரன், தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலைய மேலாளர் ஜமுனாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.