/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'தி.மு.க.,வில் 12 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு'
/
'தி.மு.க.,வில் 12 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு'
'தி.மு.க.,வில் 12 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு'
'தி.மு.க.,வில் 12 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு'
ADDED : ஜூலை 02, 2025 01:56 AM
சேலம், ''சேலம் மாவட்டத்தில், 12 லட்சம் பேரை, புதிதாக, தி.மு.க., உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து சேலத்தில் நேற்று, அவர் அளித்த பேட்டி:
மத்தியில், பா.ஜ., பொறுப்பேற்றது முதல், மாநில கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைக்கும்படி, மாநில உரிமைகளை பறித்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை தருவதில்லை. சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி, தமிழுக்கு குறைந்த நிதி ஒதுக்கியுள்ளது.
இந்தியை திணிப்பது, கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை அங்கீகரிக்க மறுப்பது உள்ளிட்ட, மண், மொழி, மானம் ஆகியவற்றை மதிக்காமல், துரோகம் செய்யும் பா.ஜ., எப்படியாவது தமிழகத்தில் காலுன்ற முயற்சிக்கிறது. இதற்கு, இ.பி.எஸ்., தலைமையில், அ.தி.மு.க., பாசிச பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து அடித்தளம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
அதனால் தமிழகத்தை காக்க மக்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்பதற்காக, முதல்வர் ஸ்டாலின், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பரப்புரை, புது உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை தொடங்கியுள்ளார்.இதன்படி சேலம் மாவட்டத்தில், தி.மு.க., மாவட்ட செயலர்கள் சிவலிங்கம், செல்வகணபதியுடன் இணைந்து கட்சி நிர்வாகிகள், ஜூலை, 3(நாளை) முதல், வீடுகள்தோறும் சென்று மக்களை சந்தித்து, புதிதாக உறுப்பினர்களை, அவர்களின் விருப்பத்தின்பேரில் சேர்க்க உள்ளனர். மாவட்டத்தில் உள்ள, 11 தொகுதிகளில், 40 சதவீத வாக்காளர்களை அதாவது, 12 லட்சம் பேரை, புதிதாக, தி.மு.க., உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயித்து இந்த பரப்புரை, 45 நாட்களுக்கு தொடர்ந்து நடக்கும். தவிர பொதுக்கூட்டம், ஊர்வலங்களும் நடக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.