அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் ஏற்காடு தொகுதி தி.மு.க., வேட்பாளர் உறுதி
அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் ஏற்காடு தொகுதி தி.மு.க., வேட்பாளர் உறுதி
ADDED : ஏப் 08, 2026 06:58 AM
வாழப்பாடி, :ஏற்காடு தொகுதி, தி.மு.க., வேட்பாளர் ரேவதி. இவர், ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம் தலைமையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன், வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில் இருந்து தாலுகா அலுவலகம் வரை பேரணியாக சென்றார். தொடர்ந்து, தேர்தல் அலுவலர் ராஜசேகரனிடம், நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து திறந்தவேனில் நின்றபடி ஆதரவு கேட்டு சென்ற வேட்பாளர் ரேவதிக்கு, மக்கள் வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த, 10 ஆண்டுக்கு மேலாக, அ.தி.மு.க.,வினர், ஏற்காடு தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை. மக்களையும் சந்திக்கவில்லை. நான் வெற்றி பெற்றதும், இத்தொகுதியில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன். உங்களில் ஒருவராக இருப்பேன். எப்பொழுதும் நீங்கள் என்னை சந்திக்கலாம். முதல்வர் ஸ்டாலின், பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்த உள்ளார். மக்களிடம் வரவேற்பை பார்க்கும்போது, ஏற்காடு தொகுதியில், தி.மு.க., அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கள்ளக்குறிச்சி லோக்சபா எம்.பி., மலையரசன், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய செயலர்கள் விஜயகுமார், ரத்தினவேல், வாழப்பாடி வடக்கு ஒன்றிய செயலர் சக்கரவர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கோபால், தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர், காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
