தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/தி.மு.க., கவுன்சிலரின் கணவரை கண்டித்து வியாபாரிகள் மறியல்

தி.மு.க., கவுன்சிலரின் கணவரை கண்டித்து வியாபாரிகள் மறியல்

தி.மு.க., கவுன்சிலரின் கணவரை கண்டித்து வியாபாரிகள் மறியல்


ADDED : பிப் 24, 2024 03:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2024 03:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: ஆத்துார் நகராட்சி அலுவலகம் அருகே, ராணிப்பேட்டை சாலையில், 20க்கும் மேற்பட்டோர், சாலையோரம் கடைகளை அமைத்து காய்கறி, இரவு உணவகம், பாத்திரம், துணிகள் விற்கின்றனர். கடந்த, 21, 22ல், கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வின்போது அண்ணா கலையரங்கம், நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள சாலையோர கடைகள் அகற்றப்பட்டன. நேற்று அந்த இடத்தில் மீண்டும் கடைகள் வைக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டனர்.

அப்போது, 20வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் பிரவீணாவின் கணவர் ராஜா, கடைகள் அமைக்கக்கூடாது எனக்கூறி, பெண்கள் உள்ளிட்டோரை, ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால் வியாபாரிகள், நகராட்சி அலுவலகம் எதிரே, மதியம், 1:00 மணிக்கு சாலைமறியலில் ஈடுபட்டனர். வியாபாரிகளுக்கு ஆதரவாக, அ.தி.மு.க., நகர செயலர் மோகன் உள்ளிட்ட கட்சியினரும் பங்கேற்றனர்.

ஆத்துார் டவுன் போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, 'அருவறுக்கத்தக்க முறையில் பேசிய கவுன்சிலரின் கணவர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், 'நகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உரிய தீர்வு காணப்படும்' என்றார்.

இதில் சமாதானம் அடைந்த வியாபாரிகள், மறியலை கைவிட்டனர். தொடர்ந்து, தி.மு.க., நகர செயலர் பாலசுப்ரமணியம், வியாபாரிகளை, நகராட்சி அலுவலகம் அழைத்துச்சென்றார். அங்கு, 'இடையூறு இல்லாமல் கடைகள் அமைக்க வேண்டும். எதிர் கட்சியினர் துாண்டுதலில் மறியலில் ஈடுபடுகிறீர்கள். உங்களை திட்டிய கவுன்சிலரின் கணவரை கண்டிக்கிறேன்' என கூறினார். இதனால் வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us