இப்பவே த.வெ.க., பிரசாரம் 'குத்தம்' சொன்னது தி.மு.க.,
இப்பவே த.வெ.க., பிரசாரம் 'குத்தம்' சொன்னது தி.மு.க.,
ADDED : மார் 23, 2026 02:57 AM
அ நிறம் | அளவு
கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்து, 14வது வார்டு, கணவாய்காடு உள்ளிட்ட இடங்களில், த.வெ.க., நிர்வாகிகள், 20க்கும் மேற்பட்டோர், நேற்று வீடுகள்தோறும் சென்று, அக்கட்சியின் 'விசில்' சின்னத்தின் ஸ்டிக்கரை, சுவர், கதவுகளில் ஒட்டினர்.
தொடர்ந்து மக்களிடம், ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். வேட்பாளர் அறிவிக்காத நிலையில் அக்கட்சியினர், பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தி.மு.க., பேரூர் செயலர் பாலமுருகன், 'தேர்தல் அலுவலர்களிடம் அனுமதி பெறாமல் பிரசாரம் செய்வதோடு, வீடுகளில் கட்சி, விசில் சின்னம் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேர்தல் அலுவலர்களிடம் புகார் தெரிவித்தார்.
