/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அமைச்சர் தலைமையில் நாளை தி.மு.க., கூட்டம்
/
அமைச்சர் தலைமையில் நாளை தி.மு.க., கூட்டம்
ADDED : செப் 21, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தி.மு.க.,வின் சேலம் மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரன் அறிக்கை:சேலத்தில் மத்திய மாவட்ட பொது உறுப்பினர் கூட்டம், செப்., 22(நாளை) காலை, 10:00 மணிக்கு, 5 ரோடு, கே.எம்.பி., திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தலைமை வகிக்க உள்ளார்.
அதில் மாவட்ட, மாநகர் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, பேரூர், கோட்ட, ஊராட்சி கிளை செயலர்கள், மாவட்ட, மாநகர பிரதிநிதிகள், பல்-வேறு அணி உள்ளிட்ட சார்பு அணி நிர்வாகிகள், பாக முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும்.