/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கருணாநிதி நினைவு நாளை ஒட்டி தி.மு.க.,வினர் அமைதி ஊர்வலம்
/
கருணாநிதி நினைவு நாளை ஒட்டி தி.மு.க.,வினர் அமைதி ஊர்வலம்
கருணாநிதி நினைவு நாளை ஒட்டி தி.மு.க.,வினர் அமைதி ஊர்வலம்
கருணாநிதி நினைவு நாளை ஒட்டி தி.மு.க.,வினர் அமைதி ஊர்வலம்
ADDED : ஆக 08, 2025 01:47 AM
சேலம், முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 7ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, தி.மு.க.,வின் சேலம் மத்திய மாவட்டம் சார்பில், அமைதி ஊர்வலம் நேற்று காலை நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
ஈ.வெ.ரா., சிலையில் தொடங்கிய ஊர்வலம், கலெக்டர் அலுவலகம் வழியே சென்று, அண்ணா பூங்கா அருகே முடிந்தது. தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திரன், அங்குள்ள கருணாநிதி சிலைக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். மாவட்ட அவைத்தலைவர் சுபாசு, பொருளாளர் கார்த்திகேயன், மேயர் ராமச்சந்திரன், மாநகர அவைத்தலைவர் முருகன், செயலர் ரகுபதி உள்பட பலர் பங்கேற்றனர்.
சேலம் மேற்கு மாவட்டம் சார்பில், தாரமங்கலத்தில், சேலம் எம்.பி., செல்வகணபதி தலைமை வகித்து, கருணாநிதி வெண்கல சிலைக்கு மாலை அணிவித்தார். நகர செயலர் குணசேகரன், ஒன்றிய செயலர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில், எம்.பி., சிவலிங்கம் தலைமையில் கட்சியினர், வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் முதல், தி.மு.க., அலுவலகம் வரை, அமைதி ஊர்வலம் சென்றனர். மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றிய செயலர் ரத்தினவேல், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பனமரத்துப்பட்டி, சந்தைப்பேட்டையில், நகர செயலர் ரவிக்குமார் தலைமையில், சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், ஒன்றிய செயலர் உமாசங்கர் உள்ளிட்டோர், அஞ்சலி செலுத்தினர். மல்லுாரில், தி.மு.க., பொறுப்பாளர் சுரேந்திரன் தலைமையில் கட்சியினர், கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்தனர்.
ஆத்துார் நகர வடக்கு, தெற்கு தி.மு.க., சார்பில், பழைய பஸ் ஸ்டாண்ட், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வில், மாவட்ட துணை செயலர் சின்னதுரை, ஆத்துார் நகர பொறுப்பாளர்கள் பாலசுப்ரமணியம், ராமச்சந்திரன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
ஓமலுாரில், ஒன்றிய செயலர் ரமேஷ் தலைமையில், டவுன் பஞ்சாயத்து தலைவி செல்வராணி உள்ளிட்ட கவுன்சிலர்கள், நகர செயலர் ரவிச்சந்திரன், மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரமேஷ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
சேலம் பெரியார் பல்கலையில், முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மையம் சார்பில், கருணாநிதி படத்துக்கு, துணைவேந்தர் நிர்வாகக்குழு உறுப்பினர் சுப்பிரமணி தலைமையில் பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர். அதேபோல் மாவட்டம் முழுதும், தி.மு.க.,வினர், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.