ADDED : ஏப் 06, 2026 03:02 AM
அ நிறம் | அளவு
வீரபாண்டி தொகுதி, தி.மு.க., வேட்பாளராக தருண் அறிவிக்கப்-பட்டதால், சீட் கிடைக்கும் என காத்திருந்து ஏமாற்றம் அடைந்த, கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், அவ-ரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
குறிப்பாக தேர்தல் பணி செய்யாமல் ஒதுங்கியுள்ளனர்.இந்நிலையில் அத்தொகுதி, தி.மு.க., தேர்தல் பார்வையாளரான, மாநில கொள்ளை பரப்பு துணை செயலர் ராஜீவ்காந்தி, நேற்று பனமரத்துப்பட்டியில், சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிருப்தி நிர்வா-கிகளை சந்தித்து, சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.
இது பலன் அளிக்குமா என்பது போகப்போகத்தெரியும்.
