ADDED : ஏப் 06, 2026 05:25 AM
அ நிறம் | அளவு
வீரபாண்டி
தொகுதி, தி.மு.க., வேட்பாளராக தருண் அறிவிக்கப்பட்டதால், சீட்
கிடைக்கும் என காத்திருந்து ஏமாற்றம் அடைந்த, கிழக்கு மாவட்ட துணை
செயலர் சுரேஷ்குமார், அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
குறிப்பாக தேர்தல் பணி செய்யாமல் ஒதுங்கியுள்ளனர்.இந்நிலையில்
அத்தொகுதி, தி.மு.க., தேர்தல் பார்வையாளரான, மாநில கொள்ளை பரப்பு
துணை செயலர் ராஜீவ்காந்தி, நேற்று பனமரத்துப்பட்டியில்,
சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிருப்தி நிர்வாகிகளை சந்தித்து, சமாதானம்
செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.இது பலன் அளிக்குமா என்பது போகப்போகத்தெரியும்.
