ADDED : பிப் 27, 2024 01:43 AM
அ நிறம் | அளவு
சேலம்:லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, த.மா.கா., போட்டியிடும் என, கட்சி தலைவர் வாசன் கூறியுள்ளார்.
இதை வரவேற்று, சேலம் மாநகர் மாவட்ட, த.மா.கா., சார்பில் அம்மாபேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் முன் பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மாநகர் மாவட்ட தலைவர் உலக நம்பி, மாநில இணை செயலர் சின்னதுரை, பொதுச்செயலர் விஷ்ணுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
