/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர்கள் அறிமுகம்
/
தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர்கள் அறிமுகம்
ADDED : ஏப் 14, 2025 06:36 AM
வாழப்பாடி: தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட நகர, ஒன்றிய, பேரூர் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம், வாழப்பாடியில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்தது. மாவட்ட செயலர் சிவலிங்கம் தலைமை வகித்தார். சேலம் மண்டல இளைஞரணி பொறுப்பாளர் சீனிவாசன், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு முன்னிலை வகித்தனர்.
அதில், தி.மு.க., கொள்கையான மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றை நிலை நாட்டிட, போராடி, கவர்னருக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்த முதல்வர், துணை முதல்வருக்கு, கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நன்றி, பாராட்டுகள்; நிதிநிலை அறிக்கையில் தமிழகம் என்ற பெயரை முற்றிலும் புறக்கணித்து அநீதி இழைக்கும் மத்திய அரசை கண்டித்து, மாவட்ட இளைஞரணி சார்பில் சட்டசபை தொகுதிகள்தோறும் கண்டன பொதுக்கூட்டங்கள், வரும், 15 முதல் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலர்கள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாழப்பாடியில் நடந்த, தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட நகர, ஒன்றிய, பேரூர் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டத்தில், மாவட்ட செயலர் சிவலிங்கம் பேசினார்.