ADDED : செப் 10, 2026 02:09 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்: மேட்டூர் அணை, சீத்தாமலை சுரங்க மின் நிலைய வளாகத்தில், நேற்று காலை புள்ளி மான் இறந்து அழுகிய நிலையில் கிடந்தது.
இதுகுறித்த தகவல்படி, மேட்டூர் வனவர் கண்ணன் உள்ளிட்ட வன ஊழியர்கள், அங்கு சென்று பார்த்தனர். அப்போது நாய்கள் கடித்ததில், 3 வயது ஆண் புள்ளிமான் இறந்தது தெரிந்தது. தொடர்ந்து காவேரிகிராஸ் கால்நடை மருத்துவர் கவின்குமார் பரி-சோதனை செய்த பின், பள்ளம் தோண்டி, மான் உடல் புதைக்கப்-பட்டது.வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த மான், அருகிலுள்ள பால-மலையில் இருந்து நீர் தேடி காவிரி ஆற்றுக்கு வந்து அங்கிருந்து ஆற்றை கடந்து சீத்தாமலைக்கு வந்திருக்கலாம். அப்போது நாய்கள் துரத்தி கடித்ததில் மான் இறந்திருக்க வாய்ப்புள்ளது' என்-றனர்.
