/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
3 வெள்ளாடுகளை கடித்துக்குதறிய நாய்கள்
/
3 வெள்ளாடுகளை கடித்துக்குதறிய நாய்கள்
ADDED : அக் 15, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி,வாழப்பாடி அடுத்த பொன்னாரம்பட்டியில், சில மாதங்களாக, விவசாயிகள் வளர்க்கும் ஆடுகள், கோழிகளை, வெறி நாய்கள் கடித்துக்குதறி வருகின்றன.
குறிப்பாக நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஜீவா தோட்டத்தில் கட்டி வைத்திருந்த, 3 வெள்ளாடுகளை, நாய்கள் கடித்துக்குதறின. இதனால் விவசாயிகள், நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து வாழப்பாடி பி.டி.ஓ., முத்தழகு கூறுகையில், ''இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.