ADDED : ஜூன் 05, 2026 04:09 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்; மேட்டூர், பி.என்.பட்டி அடுத்த கருப்புரெட்டியூர், காளியூரை சேர்ந்த விவசாயி முத்துசாமி, 45. இவரது விவசாய நிலத்தில், 50 அடி ஆழத்தில் கிணறு உள்ளது. அதில், 20 அடிக்கு தண்ணீர் உள்-ளது.
அதில் உள்ள பள்ளத்தில் பாம்பு இருந்தது. இதை அறிந்து, மேட்டூர் தீயணைப்பு, மீட்பு குழு-வினர், நேற்று காலை, அங்கு வந்தனர். தொடர்ந்து கயிறு கட்டி கிணற்றில் இறங்கி, 4 அடி நீள, கழுதை விரியன் பாம்பை உயிருடன் பிடித்து, வனத்துறை ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.
