/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மறந்தும் கூட ஓட்டுப்போடாதீர்
/
'தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மறந்தும் கூட ஓட்டுப்போடாதீர்
'தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மறந்தும் கூட ஓட்டுப்போடாதீர்
'தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மறந்தும் கூட ஓட்டுப்போடாதீர்
ADDED : ஏப் 13, 2024 07:25 AM
ஓமலுார் : சேலம் லோக்சபா தொகுதி, பா.ம.க., வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து, த.மா.கா., தலைவர் வாசன் நேற்று, ஓமலுார் அடுத்த தீவட்டிப்பட்டியில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
உங்கள் பிரச்னைகளை தீர்க்க, தகுதியான வேட்பாளரான அண்ணாதுரைக்கு மாம்பழம் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும். மத்திய அரசு செயல்படுத்த உள்ள ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தியால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும்.
தி.மு.க., அரசு கொடுத்த பரிசு என்னவென்றால் விலைவாசி உயர்வு மட்டும்தான். மறந்தும் கூட, தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்காதீர்கள். ஏனெனில் அவர்களுக்கு அளிக்கும் ஓட்டு குப்பையில் போடப்பட்டதாகும். அவர்கள் வெற்றி பெற்று வந்தால் மத்தியில் ஆளப்போகும் பா.ஜ.,வுக்கு எதிரி கட்சியாக மாறிவிடுவார்கள். மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டார்கள். நல்லரசாக உள்ள பா.ஜ., தேர்தலுக்கு பின் இந்தியாவை வல்லரசாக மாற்ற ஆதரவு அளிக்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு, ஏழ்மையை ஒழிக்க, பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இதில் வேட்பாளர் அண்ணாதுரை, த.மா.கா., சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம், பா.ஜ., சேலம் தொகுதி பொறுப்பாளர் ரவி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

