தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/பொய் தகவலை பரப்பக்கூடாது த.வெ.க., - எம்.எல்.ஏ., பேட்டி

பொய் தகவலை பரப்பக்கூடாது த.வெ.க., - எம்.எல்.ஏ., பேட்டி

பொய் தகவலை பரப்பக்கூடாது த.வெ.க., - எம்.எல்.ஏ., பேட்டி


ADDED : அக் 15, 2026 02:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2026 02:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், மூக்கனேரி உபரிநீர் மற்றும் பல்வேறு பகுதிகளின் கழி-வுநீர் வெளியேற, கால்வாய் அமைக்கப்பட்டு அதன் மேற்புறம் சிமெண்ட் ஸ்லாப் பொருத்தும் பணி நடக்கிறது. அங்கு கடந்த, 12ல், த.வெ.க.,வை சேர்ந்த, சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் ஆய்வு செய்து, 'என்னை கேட்காமல் கால்வாயில் ஸ்லாப் அமைக்கக்கூடாது. உடைத்து எறிந்து விடுவேன்' என, ஒப்பந்ததாரரை மிரட்டிய வீடியோ பரவியது.

தொடர்ந்து மறுநாள், அதே பகுதியில் உள்ள நில உரிமையாளர்-களில் ஒருவரான செந்தில்குமார் என்பவர், ஒரு வீடியோ வெளி-யிட்டார். அதில், 'எம்.எல்.ஏ., சிவக்குமார், 20,000 சதுரடி நிலம் தர வேண்டும். மறுத்தால், 5,000 சதுர அடி நிலமாவது வேண்டும். அதுவும் இல்லையென்றால், 3 கோடி ரூபாய் தர வேண்டும். இதையும் தர மறுத்தால் அடிக்கடி ஆய்வு பெயரில் வந்து, கால்வாய் பணிகளை செய்ய விடாமல் தடுத்து நிறுத்துவி-டுவேன் என மிரட்டினார்' என கூறியிருந்தார்.

இதுகுறித்து எம்.எல்.ஏ., சிவக்குமார், அவரது அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி:

கால்வாய் மீது ஸ்லாப் அமைக்கக்கூடாது என கூறியிருந்தேன். அதை மீறி கால்வாய் முழுதையும், 'ஸ்லாப்' போட்டு மூடினர். இதை அறிந்து, அங்கு சென்ற நான் கோபத்தில், 'அதை அகற்ற வேண்டும்' என்று தான் கூறினேன். ஏ.ஐ., மூலம் சித்தரித்து வெளியிட்டு உள்ளனர். தகாத, ஆபாச வார்தைகளில் பேசியதாக கூறியது முழுக்க முழுக்க பொய். நான் பணமோ, நிலமோ, லஞ்ச-மாக கேட்டதாக ஆதாரம் இருந்தால், அதை வெளியிட வேண்டும். பொய் தகவலை பரப்பக்கூடாது. என் மீது சுமத்தப்-படும் குற்றச்சாட்டு பொய்யானது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us