தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'டபுள் இன்ஜின், டப்பா இன்ஜின்' போஸ்டர் கிழிப்பு தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., வாக்குவாதம், முற்றுகை

'டபுள் இன்ஜின், டப்பா இன்ஜின்' போஸ்டர் கிழிப்பு தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., வாக்குவாதம், முற்றுகை

'டபுள் இன்ஜின், டப்பா இன்ஜின்' போஸ்டர் கிழிப்பு தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., வாக்குவாதம், முற்றுகை


ADDED : ஜன 31, 2026 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 07:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெங்கவல்லி: கெங்கவல்லியில், என்.டி.ஏ., கூட்டணியை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்த, பா.ஜ., நிர்வாகி மீது தாக்க முயற்சி செய்தது தொடர்பாக, அ.தி.மு.க., - பா.ஜ.,வினர், போலீசில் புகார் அளித்ததுடன், முற்றுகையில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில், 'டபுள் இன்ஜின், டப்பா இன்ஜின்' தமிழ்நாட்டில் ஓடாது. அடிமைகளை விரட்-டுவோம்; தமிழ்நாட்டை காப்போம்' என, தி.மு.க.,வினர், நேற்று முன்தினம் நள்ளிரவு சுவர்களில் போஸ்டர்களை ஒட்டிக் கொண்டிருந்-தனர். அதையறிந்த பா.ஜ.,வினர் சிலர் போஸ்டர்-களை கிழித்தனர். இதனால், பா.ஜ., - தி.மு.க.,வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்-டது.தி.மு.க.,வினர் அதிகளவில் வந்ததால், பா.ஜ.,வினர், கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷன் சென்றனர். அங்கு சென்ற தி.மு.க., பேரூர் செயலர் பாலமுருகன் தலைமையிலான கட்சி-யினர், போஸ்டரை கிழித்தவர்கள் மீது நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, போலீசில் புகார் அளித்தனர்.

அதேபோல், அ.தி.மு.க., கெங்கவல்லி ஒன்றிய செயலர் ராஜா, பேரூர் செயலர் இளவரசு, பா.ஜ., மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் உள்பட, 100க்கும் மேற்பட்டோர், நேற்று கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, 'என்.டி.ஏ., கூட்டணி குறித்து அவதுாறாக போஸ்டர் ஒட்டிய, தி.மு.க.,வினர் மீது நடவ-டிக்கை எடுக்க வேண்டும்' என, புகார் அளித்தனர். இருதரப்பு புகார் மீதும் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின், அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து, பா.ஜ., மாவட்ட தலைவர் சண்மு-கநாதன் கூறியதாவது:

பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., பா.ம.க., அன்புமணி, அ.ம.மு.க., தினகரன் படத்-துடன், என்.டி.ஏ., கூட்டணியினரை கேலியாக சித்தரித்து, டபுள் இன்ஜின், டப்பா இன்ஜின் என்று, தி.மு.க.,வினர் அவதுாறாக போஸ்டர்களை, மாவட்டம் முழுவதும் ஒட்டி வருகின்றனர். போஸ்டர் எங்கு அச்சடித்தது என்ற விபரம் இல்லை. திருட்டு போஸ்டர் எதற்கு ஒட்டுகி-றீர்கள் என, பா.ஜ., ஒன்றிய தலைவர் செந்தில்-ராஜன் கேள்வி எழுப்பினார்.

தனி நபராக இருந்த அவரை, தி.மு.க., பேரூர் செயலர் பால

முருகன் தலைமையிலான, சுல்தான், சிட்டிபாபு, ஆரோக்யராஜ் உள்பட, 30க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து தாக்க முயற்சி செய்ததால், அவர்களிடம் தப்பித்து, சிலருடன் சேர்ந்து

கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷன் வந்தனர். போலீசார் இருவர் மட்டுமே இருந்ததால், ஸ்டேஷனில் இருந்து இழுத்து வர முயற்சி செய்தனர். பா.ஜ.,வினர் மீது தாக்குதல் நடத்திய, தி.மு.க.,வினரை கைது செய்ய வேண்டும் என, புகார் செய்துள்ளோம். இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து, தி.மு.க., பேரூர் செயலர் பாலமு-ருகன் கூறுகையில், ''தி.மு.க., தலைமையில் இருந்து அனுப்பி வைத்த போஸ்டர்களை கட்சி-யினர் ஒட்டியபோது, பா.ஜ.,வினர் சிலர் கிழித்-துள்ளனர். அதை தட்டிகேட்டபோது, அந்த நபர்கள் ஓடிவிட்டனர். போஸ்டர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீசில் புகார் அளித்துள்ளோம்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us