ADDED : ஏப் 15, 2026 06:39 AM
அ நிறம் | அளவு
ஜலகண்டாபுரம், : சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், செலவடை அருகே ஓங்காளியம்மன் கோவில் பின்புறம் உள்ள பிளாட்டில், காவலாளியாக பணிபுரிந்தவர் சரணவன். 56. இவர் பிளாட்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி மேற்கொண்டார். அப்போது பக்கத்தில் வசிக்கும் டிரைவர் கோவிந்தராஜ், 40, 'என் வீட்டுக்கு குடிநீர் வராமல் இருப்பதற்கு காரணம் சரவணன் தான்' என கூறி, அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டார்.
அதேபோல் நேற்று காலை, 11:30 மணிக்கு, அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், சூரிக்கத்தியால் சரவணனை குத்தியுள்ளார். அப்போது சரவணன், கோவிந்தராஜை தள்ளிவிட்டதில் அவர் தடுமாறி விழுந்து காயம் அடைந்தார். ஆனால் சரவணன் இறந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். ஜலகண்டாபுரம் போலீசார், கோவிந்தாஜை கைது செய்தனர்.
