ADDED : டிச 16, 2025 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, லாரி டிரைவரை போக்சோ வழக்கில் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் வளையமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், 24. இவர், டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இன்ஜினிரியரிங் படித்துவிட்டு, லாரி டிரைவராக பணிபுரிகிறார். இவருக்கும், ஆத்துாரை சேர்ந்த, 16 வயது பள்ளி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவி, வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு சென்ற செல்வம் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்
இதுகுறித்து, மாணவி பெற்றோர் அளித்த புகாரில், டிரைவர் செல்வம் மீது, ஆத்துார் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து, நேற்று அவரை கைது செய்தனர்.

