தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/கருங்கல்லுடன் லாரி பறிமுதல் தப்பிய டிரைவருக்கு வலை

கருங்கல்லுடன் லாரி பறிமுதல் தப்பிய டிரைவருக்கு வலை

கருங்கல்லுடன் லாரி பறிமுதல் தப்பிய டிரைவருக்கு வலை


ADDED : ஜூலை 23, 2026 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: சேலம், காடையாம்பட்டி தாசில்தார் கருணாகரன் தலைமையில், நேற்று முன்தினம் தாசசமுத்திரம் கிராமம், மாதங்காடு பகுதியில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்-பட்டது. அங்கு வந்த டாரஸ் லாரியை நிறுத்தி, சோதனையிட்-டதில் கருங்கற்கள் இருப்பது தெரிந்தது. டிரைவரிடம் நடத்திய விசாரணையில், அனுமதி பெற்று கருங்கற்களை எடுத்து செல்வ-தாக கூறி, ஆவணங்களை காண்பித்தார்.

அதிகாரிகள் சந்தேகமடைந்து, லாரியை வே-பிரிட்ஜூக்கு எடுத்து சென்று எடை போட்டதில், அனுமதிக்கப்பட்டதை விட, கூடுத-லாக 11 மெட்ரிக் டன் கருங்கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்-டது. அதையடுத்து, டிரைவர் அங்கிருந்து, தப்பினார். பின், ஆக்டிங் டிரைவர் உதவியுடன், கருங்கற்களுடன் லாரி, தீவட்டிப்-பட்டி போலீசாரிடம் ஒப்படைத்து, மேல் நடவடிக்கைக்கு பரிந்து-ரைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து டிரைவர் மற்றும் லாரி உரிமையாளரை போலீசார் தேடி வருகின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us