sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

டிரைவர் வெட்டிக்கொலை; எலக்ட்ரீஷியன் கைது

/

டிரைவர் வெட்டிக்கொலை; எலக்ட்ரீஷியன் கைது

டிரைவர் வெட்டிக்கொலை; எலக்ட்ரீஷியன் கைது

டிரைவர் வெட்டிக்கொலை; எலக்ட்ரீஷியன் கைது


ADDED : நவ 27, 2024 06:44 AM

Google News

ADDED : நவ 27, 2024 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கெலமங்கலம் அருகே, டிரைவரை வெட்டிக்கொன்ற எலக்ட்ரீஷியனை, போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, கெலமங்கலம் அடுத்த கிரிசெட்டிப்பள்ளியை சேர்ந்தவர் முருகேசன், 28, டிரைவர்; இவர் நேற்று மாலை, 4:30 மணிக்கு, அப்பகுதியிலுள்ள சாலையில் நடந்து சென்றபோது, மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டி கொன்றார். கெலமங்கலம் போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர்.

இதில், முருகேசனுக்கும், அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீஷியன் நரசிம்மன், 30, என்பவரது மனைவி பாரதி, 25, என்பவருக்கும் கடந்த, 4 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த நரசிம்மன் பலமுறை கண்டித்தும், முருகேசன் தொடர்பை துண்டிக்காமல் இருந்துள்ளார். ஆத்திரமடைந்த நரசிம்மன், நேற்று மாலை முருகேசனை அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளார். நரசிம்மனை நேற்றிரவு கெலமங்கலம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us