ADDED : மே 16, 2026 04:22 AM
அ நிறம் | அளவு
சேலம்; சேலம், சின்னகொல்லப்பட்டி ராஜகணபதி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 33, கார் டிரைவராக பணிபுரிந்தார்.
இவரது மனைவி அபி, 21. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கிருஷ்ணமூர்த்தி வாடகைக்கு ஆட்-டோவும் ஓட்டினார். நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, சின்னகொல்லப்பட்டியில் நடந்து சென்று சாலையை கடக்க முயன்றார். அப்போது கோரிமேட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த சரக்கு வாகனம் கிருஷ்ணமூர்த்தி மீது மோதியது. படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழியில் அவர் உயிரிழந்தார். கன்னங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
