ADDED : மே 07, 2025 02:18 AM
அ நிறம் | அளவு
வாழப்பாடி,:சேலம், 4 ரோட்டை சேர்ந்த, கார் டிரைவர் கார்த்திகேயன், 45. தற்போது வாழப்பாடி டவுன் பஞ்சாயத்து செல்லியம்மன் கோவில் முதல் தெருவில் வீடு வாங்கி அங்கு வசித்தார்.
நேற்று காலை, அவரது வீட்டுக்கு, நீர்முள்ளிக்குட்டையை சேர்ந்த ராஜம்மாள், 45, என்பவர் சென்றபோது, கார்த்திகேயன் உடல் அழுகிய நிலையில், மேல் மாடியில் இறந்து கிடந்தார். வாழப்பாடி போலீசார், கார்த்திகேயன் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
