/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதை'யில் ரகளை கும்பல் சுற்றிவளைப்பு
/
போதை'யில் ரகளை கும்பல் சுற்றிவளைப்பு
ADDED : நவ 29, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கிச்சிப்பாளையத்தில் கடந்த, 24ல் இரு தரப்பினர் இடையே, 'போதை'யில் தகராறு ஏற்பட்டு, தாக்கிக்கொண்ட பின் தலைமறைவாகி விட்டனர்.
வழக்குப்பதிந்து கிச்சிப்பாளையம் போலீசார், அவர்களை தேடினர். இந்நிலையில் அங்குள்ள பழைய கட்டடத்தில் இருந்த சன்னியாசிகுண்டை சேர்ந்த வேலுசாமி, 29, கீர்த்திவாசன், 24, பூபதி, 23, மணிகண்டன், 26, அரவிந்த், 25, ந.கார்த்திக், 26, மற்றொரு கார்த்திக், 24, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

