/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கால்நடை மருந்தகத்தில் 'குடி'மகன்கள் முகாம்
/
கால்நடை மருந்தகத்தில் 'குடி'மகன்கள் முகாம்
ADDED : ஆக 25, 2024 07:03 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில், கால்நடை மருந்தகம் உள்ளது. இரவில், விளக்கு வெளிச்சம் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதை குடிமகன்கள் சாதகமாக பயன்படுத்தி, கால்நடை மருந்தக நுழைவாயில் கேட்டை திறந்து உள்ளே சென்று, வராண்டா பகுதியில் முகாமிடுகின்றனர்.
அங்கே மது அருந்தி, குத்தாட்டம் போடுகின்றனர். மிச்சம் மீதி மது, டம்ளர், உணவு பொருட்களை விட்டு செல்கின்றனர். அடுத்த நாள் காலை வேலைக்கு வரும் கால்நடை மருந்தக பணி-யாளர்கள் சுத்தம் செய்யும் அவல நிலை உள்ளது.
அப்பகுதியில் உடைக்கப்படும் காலி மது பாட்டில் கண்ணாடி துகள், சிகிச்சைக்கு அழைத்து வரப்படும் கால்நடைகளில் கால்-களை பதம் பார்க்கிறது. அரசு கட்டடங்களை, பாராக மாற்றும் குடிமகன்களை போலீசார் விரட்ட வேண்டும்.

