/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவில் விவகாரம் டி.எஸ்.பி., விசாரணை
/
கோவில் விவகாரம் டி.எஸ்.பி., விசாரணை
ADDED : அக் 25, 2025 01:01 AM
ஆத்துார், நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலம் அருகே ஓடை பகுதியில், பெரியநாயகி அம்மன், முப்பெரும் தேவி கோவில்கள் உள்ளன. தேவி கோவில் கட்டுமான பணிக்கு பின், பெரியநாயகி கோவில் பாதையை அடைத்துவிட்டதாக கூறி, கடந்த செப்டம்பரில், வடக்கு தில்லை நகர் பகுதி மக்கள் புகார் கூறினர். இதுதொடர்பாக வருவாய்த்துறையினர், ஆத்துார் டவுன் போலீசார் விசாரித்தனர்.
தொடர்ந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில், தில்லை நகர் மக்கள் சார்பில், லட்சுமணன் என்பவர் புகார் அளித்தார். இதனால் சேலம் கலெக்டர், எஸ்.பி., விசாரித்து, இரு வாரங்களில் உரிய விளக்கம் அளிக்கும்படி, ஆணைய இயக்குனர் ரவிவர்மன் உத்தரவிட்டார்.
இதையடுத்து, பெரியநாயகி அம்மன் கோவிலில் வழிபடுவோரை, நேற்று, ஆத்துார் டி.எஸ்.பி., அலுவலகம் வரவழைத்து, டி.எஸ்.பி., சத்யராஜ் விசாரித்தார். அப்போது,
'இரு கோவில் தொடர்பான ஆவணங்கள்,
ஆர்.டி.ஓ.,விடம் பெற்று, எஸ்.பி., மூலம் ஆணையத்துக்கு அனுப்பப்படும்' என,
மக்களிடம் தெரிவித்தார்.

