sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கனமழைக்கு அரசுப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து 5 வீடுகள் சேதம்

/

கனமழைக்கு அரசுப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து 5 வீடுகள் சேதம்

கனமழைக்கு அரசுப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து 5 வீடுகள் சேதம்

கனமழைக்கு அரசுப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து 5 வீடுகள் சேதம்


ADDED : அக் 07, 2024 03:07 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலத்தில் வெளுத்துக்கட்டிய மழையால், மாநகராட்சி பள்ளி சுற்-றுச்சுவர் இடிந்து விழுந்ததில், ஐந்து வீடுகள் சேதமாகின.

தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் பரவ-லாக மழை பெய்கிறது. சேலத்தில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மாவட்டத்-திலும் பரவலாக கொட்டிய மழை, விட்டு விட்டு பெய்தது. நள்ளி-ரவுக்கு பின் சாரலாக நீடித்தது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக சேலத்தில், 108.5 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. ஆணைமடுவு, 80, ஏற்காடு, 63.3, டேனிஷ்பேட்டை, 47, ஆத்துார், 43, கரிய-கோவில், 30, வீரகனுார், 24, ஏத்தாப்பூர், 19, தம்மம்பட்டி, 18, ஓமலுார், 16, மேட்டூர், 7.2, சங்ககிரி, 7, இடைப்பாடி, 6, கெங்க-வல்லி, 5, வாழப்பாடி, 4 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.கோவிலை சூழ்ந்த தண்ணீர்கனமழையால் சேலம், அணைமேடு பாலத்தில் மழைநீர் அரு-விபோல் கொட்டியது. வெண்ணங்குடி முனியப்பன் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது. புது பஸ் ஸ்டாண்டில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி பயணியர் சிரமப்பட்டனர். பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்-குள்ளும் வெள்ளம் புகுந்தது.அழகாபுரத்தில் அன்னை தெரசா நகர், நெத்திமேட்டில் அகரம் காலனி, சூரமங்கலத்தில் முல்லை நகர், கிச்சிப்பாளையம், அம்மா-பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. போடிநாயக்கன்பட்டி ரயில்வே நுழைவு பாலத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.குகை மூங்கப்பாடி மாநகராட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அருகில் இருந்த ஐந்து வீடு-களின் சுவர் இடிந்தது. வீட்டை சேர்ந்தவர்கள் உள்ளறையில் துாங்கியதால் உயிர் தப்பினர். சேதமான வீடுகளை, சுற்றுலாத்-துறை அமைச்சர் ராஜேந்திரன் பார்வையிட்டு, ஐந்து குடும்பத்தின-ருக்கும் நிவாரண உதவி வழங்கினார்.ஆத்துாரை அடுத்த முல்லைவாடி வடக்கு பாவேந்தர் தெருவில், மரக்கிளை முறிந்து சாய்ந்ததால் மின்கம்பம் சேதமானது.






      Dinamalar
      Follow us