ADDED : ஜூலை 23, 2025 02:26 AM
அ நிறம் | அளவு
நாமக்கல், நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, 515 காசுக்கு விற்ற முட்டை விலை, 15 காசு குறைத்து, 500 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:சென்னை, 550, ஐதராபாத், 480, விஜயவாடா, 520, பர்வாலா, 438, மும்பை, 540, மைசூரு, 655, பெங்களூரு, 560, கோல்கட்டா, 545, டில்லி, 460 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
