890 மொபைல் எண்கள் ஆய்வுக்கு பின் முதிய தம்பதி கொலையாளிகள் சிக்கினர்
890 மொபைல் எண்கள் ஆய்வுக்கு பின் முதிய தம்பதி கொலையாளிகள் சிக்கினர்
ADDED : அக் 05, 2026 12:53 AM
ஓமலுார்: காடையாம்பட்டி, சென்றாய ரெட்டியூர், புளியமரம் பஸ் ஸ்டாப் அருகே கடந்த ஜூலை, 20 இரவு, முதிய தம்பதி ஜெயராமன், 80, அமராவதி, 65, கொலை செய்யப்பட்டனர். தோடு, மூக்குத்தி திருடுபோனது தெரிந்தது. கடந்த, 2ல், கொலையாளிகான, சந்-தைப்பேட்டையை சேர்ந்த தினேஷ்குமார், 32, சூர்யா, 26, கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
டி.ஐ.ஜி., - எஸ்.பி., ஒரு மாதம் முகாமிட்டு விசாரணையை முடுக்கி விட்டனர். தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி உள்பட, 5 தனிப்படையினர், 'சிசிடிவி' கேமரா பதிவு, மொபைல் போன் அழைப்பு பதிவு, போன் டவர்கள், குற்றவாளி-களின் பயண வழித்தடங்கள், தடய அறிவியல் சான்றுகள், கள விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. 890-க்கும் மேற்பட்ட மொபைல் எண்கள் ஆய்வு செய்யப்பட்டது. கொலையான குடும்ப உறுப்பினர்கள், பணப்பரிவர்த்தனை தொடர்புடைய நபர்கள், பழைய குற்றவாளிகள் உள்பட பல்வேறு நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தொடர் விசாரணைக்கு பின், நகை கடைகளில் தீவிர விசாரணை, அங்கு பதிவான காட்சிகளை கொண்டு புலன் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர்கள் பயந்து போய் சரண் அடைந்தனர். பல்வேறு நகைகள் திருடிய வழக்குகளிலும் தொடர்புடையவர்கள் என தெரிந்தது. அவர்க-ளிடம், 15.5 பவுன் நகைகள், 350 கிராம் வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
