/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீட்டினுள் சாராயம் காய்ச்சிய முதியவர் கைது
/
வீட்டினுள் சாராயம் காய்ச்சிய முதியவர் கைது
ADDED : ஏப் 29, 2025 02:05 AM
ஆத்துார்:
ஆத்துார் அருகே, ஊராண்டிவலசை சேர்ந்தவர் விவசாயி சுப்ரமணி, 60. இவருக்கு இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. தோட்டத்தில் உள்ள வீட்டினுள் சாராயம் இருப்பதாக, சேலம் மாவட்ட எஸ்.பி., கவுதம்கோயலுக்கு புகார் சென்றது. அவரது உத்தரவுபடி, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையிலான போலீசார், நேற்று ஊராண்டிவலசு கிராமத்தில் உள்ள சுப்ரமணியின் தோட்டம், வீடுகளில் ஆய்வு செய்தனர்.
வீட்டின் சுவற்று பகுதியில், சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. 20 லிட்டர் சாராய ஊறல் மற்றும் ஐந்து லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். சாராயம் காய்ச்சிய சுப்ரமணியை, மல்லியக்கரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து, போலீசார் கூறுகையில், 'விவசாயி சுப்ரமணிக்கு சாராயம் கிடைக்காததால், கொல்லிமலை நண்பரிடம் ஆலோசனை பெற்று, வீட்டினுள் பேரீச்சம் பழம், திராட்சை உள்ளிட்ட பழங்கள், மூலிகைகளை போட்டு சாராயம் காய்ச்சியுள்ளார்.
இவற்றை வெளி நபர்களுக்கு விற்பனை செய்யாமல், அவரே குடித்து வந்துள்ளார். காய்ச்சி வைத்திருந்த ஐந்து லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து, 20 லிட்டர் ஊறல் அழிக்கப்பட்டுள்ளது.' என்றனர்.