ADDED : ஆக 26, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்,மதுபோதையில், தடுமாறி கீழே விழுந்த முதியவர் உயிரிழந்தார்.
மேட்டூர், கருமலைக்கூடல், புதுகுடியிருப்பு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதப்பன், 62, கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் காலை, 8:00 மணியளவில் வெளியே சென்ற மாதப்பன் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், நேற்று காலை மாதப்பன் சிட்கோ தொழிற்பேட்டையில், ஒரு பைப் கம்பெனி அருகே இறந்து கிடந்தார். மாதப்பன் இறந்தது குறித்து, அவரது மனைவி கமலா கருமலைக்கூடல் போலீசில் புகார் செய்தார். அப்போது போலீசார் சிட்கோவில் அமைக்கப்பட்டுள்ள 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், மாதப்பன் மதுபோதையில் சாலையோரம் தடுமாறி, கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதால் இறந்தது தெரியவந்தது. கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.