ADDED : ஜூலை 08, 2026 04:42 AM
அ நிறம் | அளவு
சேலம்:கரூர்
- சேலம் பயணியர் ரயில் நேற்று முன்தினம் காலை, சேலம் ஸ்டேஷனுக்கு
வந்தது. அப்போது ரயிலில், 70 வயது மதிக்கத்தக்க முதியவர், மயங்கிய
நிலையில் கிடந்தார். ரயில்வே மருத்துவர் பரிசோதித்ததில், அவர்
இறந்திருந்தது தெரிந்தது.
ரயில்வே போலீசார் உடலை
கைப்பற்றி விசாரித்ததில், அவர், கரூர் மாவட்டம் அம்மாள் நகரை சேர்ந்த
தங்கவேல், 70 என்பதும், சிறுநீரக பையில் கேன்சரால் பாதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்று வந்ததும் தெரிந்தது. மேலும் கடந்த, 5ல் மனைவி
தெய்வானை, மகள் வளர்மதியிடம், ஹோமியோபதி மருத்துவரை பார்க்க
செல்வதாக கூறிவிட்டு வந்ததும் தெரிந்தது. தொடர்ந்து போலீசார்
விசாரிக்கின்றனர்.
