ADDED : ஏப் 01, 2026 05:33 AM
அ நிறம் | அளவு
மேட்டூர், சேலம் மாவட்டம் மேச்சேரி, பொட்டனேரி அடுத்த குள்ளமுடையானுாரை சேர்ந்தவர் கவுரிசங்கர், 52. வெள்ளாறு, கம்மம்பட்டியை சேர்ந்தவரை, திருமணம் செய்தார்.
தொடர்ந்து கரூரில் வசித்தார். 3 மாதங்களுக்கு முன், கம்மம்பட்டியில் வீடு கட்ட அவரது மாமனார் நிலம் கொடுத்தார். அந்த நிலத்தில் கவுரிசங்கர் வீடு கட்டிக்கொண்டிருந்தார்.
நேற்று மாலை, 4:30 மணிக்கு, வீட்டினுள் பதிக்க கிரானைட் கற்கள் லாரியில் கொண்டுவரப்பட்டன. அந்த கற்களை தொழிலாளர்களுடன் கவுரிசங்கரும் லாரியில் இருந்து இறக்கினார். அப்போது கிரானைட் கற்கள் சரிந்து, கவுரிசங்கர் மீது விழுந்தது. கற்கள் நசுக்கி கவுரி
சங்கர் பலியானார்.
மேச்சேரி போலீசார்
விசாரிக்கின்றனர்.
