ADDED : செப் 12, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே, கூடமலை கிராமத்தை சேர்ந்த பொன்னன் மனைவி காமாட்சி, 85. இவர், நேற்று தண்ணீர் பிடிப்பதற்காக குடத்துடன், கெங்கவல்லி - தம்மம்பட்டி சாலையை கடந்து சென்றுள்ளார்.
அப்போது கெங்கவல்லியில் இருந்து, தம்மம்பட்டி நோக்கி பால் எடுத்துச் சென்ற 'டாடா' சரக்கு வேன், காமாட்சி மீது மோதியது. இதில் அவர் உயிரிழந்தார்.வேன் டிரைவர் முசிறியை சேர்ந்த முருகேசன், 24, என்பவரை கெங்கவல்லி போலீசார் கைது செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.