ADDED : அக் 23, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், கொண்டலாம்பட்டி அடுத்த பி.நாட்டாமங்கலம், பெருமாள் கோவில் கரட்டூரில் தனியே வசித்தவர் குப்பாயி, 74. இருதய நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு, அவரது மூத்த சகோதரிகள் பச்சையம்மாள், ராஜமுத்து உடன் தங்கினர்.
நள்ளிரவு, 1:30 மணிக்கு, நெஞ்சுவலி அதிகமாகி துடித்த குப்பாயி, சிறுநீர் கழிக்க வெளியே சென்ற நிலையில் திரும்ப வரவில்லை. தேடியபோது, அருகே காட்டுப்பகுதியில், மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.