/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'தேர்தல் மன்னன்' பத்மராஜன் மனுதாக்கல்
/
'தேர்தல் மன்னன்' பத்மராஜன் மனுதாக்கல்
ADDED : அக் 19, 2024 02:37 AM
மேட்டூர்: மேட்டூர் தேர்தல் மன்னன் பத்மராஜன், 244வது முறையாக நேற்று கேரளா மாநிலம், வயநாடு லோக்சபா தொகுதி இடைத்-தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
சேலம் மாவட்டம், மேட்டூர், ராமன் நகரை சேர்ந்தவர் தேர்தல் மன்னன் பத்மராஜன், 65. இவர், 243 முறை தேர்தலில் போட்டி-யிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் கடந்த ஆகஸ்டில் தெலங்கானா மாநிலம் ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு போட்டியிட, செகந்திராபாத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் உபேந்தர் ரெட்டி-யிடம், 243வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார். தற்-போது கேரளா மாநிலம், வயநாடு லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல்காந்தி அதனை வாபஸ் செய்தார். அந்த தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், நேற்று பத்மராஜன், வயநாடு லோக்சபா தொகுதியில் போட்டி-யிட, தேர்தல் நடத்தும் அலுவலர் மெகாஸ்ரீயிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.