ADDED : செப் 26, 2024 02:43 AM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே மேல்நாடு ஊராட்சி, மோதுார் நடுவீதியை சேர்ந்தவர் ஆசைதம்பி, 45. கருமந்துறை மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்தார். கடந்த, 23ல் வீட்டில் தனியே இருந்த அவரை, தலையை துண்டித்து மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்தனர். கரியகோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் வாழப்பாடி டி.எஸ்.பி., ஆனந்த் தலைமையில் இரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
