ADDED : மார் 09, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், மின்
கழகத்துக்கான புதிய உத்தரவை ரத்து செய்யக்கோரி, தமிழ்நாடு
மின்வாரிய ஊழியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விளக்க கூட்டம்
நேற்று நடந்தது.
மேட்டூர் அனல்மின் நிலையம் முன் நடந்த கோரிக்கை
விளக்க கூட்டத்தில் திட்ட தலைவர் சந்தோஷ் தலைமை வகித்தார். திட்ட
செயலாளர் தெய்வன், மாநில இணை செயலாளர் பிரகாசம் உள்ளிட்ட நிர்வாகிகள்
பங்கேற்றனர். கூட்டத்தில், மின் கழகத்துக்காக அரசு அறிவித்துள்ள, 6
மற்றும் 7 ஆகிய உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். கடந்த மாதம், 12ல்
நடந்த கூட்டத்தில் போட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய
வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

